பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் -o- 215 -4 பாடல்கள் யாவும் குழந்தை மனத்திற்கு ஏற்றவையாக உள்ளன. சரத்காலம்: இது மழைக்காலம். மழை பற்றி வள்ளுவப் பெருந்தகை கூறுவது: விசும்பின் துளிவிழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண் பரிது - குறள்-16 விசும்பிலிருந்து மழைத் துளி வீழ்ந்தால் அல்லாமல், இந்த நில உலகத்தில் பசிய புல்லின் தலையையும் காண்பது அரிது என்கின்றார். மழைக் காலத்தைப் பற்றி வருணிக்கும் கவிமணியின் பாடல்களில் தமிழ் வளம் கொழிக்கின்றது. பச்சைப் பாட்டு விரித்தாற் போன்ற நெல் வயலைக் காணும்போது பொன்னொளியும் பச்சை நிறத்தின் பொலி வும் கலந்து காட்சியளிக்கும்; மழைக்கால மேகம் அந்த வயலின்மீது நிழலை வீசும்; அந்த மேகத்தைக் கதிரவன் வெருட்டிச் செல்லும். மலரில் உள்ள தேனை உண்டு மகிழும் வண்டும் அதனை மறந்து அங்குமிங்கும் சுழன்று சுழன்று ரீங்காரமிட்டுத் திரியும். நதி, குளம் இவற்றின் கரைகளில் வாழும் தாரா என்னும் பறவை இனிய குரலை எழுப்பிக் கொண்டு அங்குமிங்கும் திரியும். மழைக் காலக் காட்சியைத் தாம் கண்டவாறு கூறுகின்றார் கவிமணி, விரித்துவிடு பாய்காற்றுப் பிடித்து ஒடம் விரைந்துகுதித் தோடியழ கமையக் கண்டேன்; பெருத்தநிதி யிருக்குமிடம் பாடம் கேட்டேன்; பெறும்வழிகள் அறிந்தாசை பெரிதும் கொண்டேன்; திருத்தமுறச் சுடரொழிதான் முகத்தில் வீசத் திரண்டுபுயல் பின்வர, மாலுமியும் நின்றான்; கருத்தொ டெதைப் பாடுவன்யான் களிப்பி லொன்றாய்க் கண்ணிரும் புன்னகையும் கலந்தது அம்மா: (3) 4. ம.ம. சரத்காலம் - பக்.85