பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் -j- 217 -4 ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல ஏரிகுளங்கள் நிரப்பி வந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன் (4) பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன் - சீனி பாகமாய்ச் செய்து கொடுத்துவந்தேன்; நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில் - குழாய் நீராக வும்.சென்று பாய்ந்து வந்தேன் (6) அல்லும் பகலும் அலைந்துவந்தேன் - எங்கள் ஆழி இறைவனைக காணவந்தேன்; நில்லும் எனக்கினி நேரமில்லை - இன்னும் நீண்ட வழிபோக வேண்டு மம்மா! (8) கவிதைகளைச் சுவைக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பாடல் களை மாணிக்கங்களாக மதித்துப் போற்றுவர். பாட்டும் நடையும் ஒசையும் ஆற்று நீர் பாயும் பாணியில் அமைந்தி ருப்பதுபோல் புலப்படும். ஒரு நல்ல கவிதைக்குரிய குணமும், நயமும் இன்பத்தை நல்கும் ஆற்றலும் பாடல்க ளின் கட்டும் தே.வி.யின் பாடல்களில் மிளிர்வதைக் கண்டு மகிழலாம். கடல்: ஆற்றைப் பற்றிப் பேசிய கவிஞர் ஆழியைப் பற்றியும் பேசத் தொடங்குகின்றார் ஆறு பாடல்களில்." ஒரு குழந்தையின் கூற்றுகளாகப் பாடல்கள் அமைந்துள் ←ᎥᎢ☾Ꭲ . எல்லை அறியாப் பெருங்கடலே! - நீதான் இரவும் உறங்காயோ? கடலே! அல்லும் பகலும் அலைகடலே! - உனக்கு அலுப்பும் இலையோ? கருங்கடலே! (1) 5. ம. மா. கடல் பக்.73