பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 218 -o- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஒடம் எடுத்தெறியும் கடலே! - தயை உனக்குச் சற்றிலையோ? கடலே: ஆடல் வீடிதனைக் கடலே! - நீயும் அழிப்ப தழகாமோ? கடலே! (4) மலையை வயிற்றடக்கும் கடலே! - எண்ணில் மகர மீனுலவும் கடலே! விலைகொள் முத்தளிக்கும் கடலே! - சிப்பி விளையாடற் குதவும் கடலே! (5) மழைக்கு மூலமும்நீ கடலே! - அதை வாங்கி வைப்பதும்நீ, கடலே! வழுத்து மகிமையெலாம் கடலே! - எவர் மதித்து முடிக்கவலார்? கடலே! (6) இப்பாடல்களைப் படிப்போர் தம் உள்ளத்தைப் பறி கொடுத்துப் போவர் என்பது உறுதி. வான்மதி: நினைப்பிற்கும் எட்டாத நெடுங்கால மாகவே இரவு நேரத்தில் ஒளியை அளித்து மக்களுக்குக் களிப்பினை ஊட்டி வரும் சந்திரன் அவர்கள் கவனத்தைக் கவர்ந்து வந்துள்ளான். பால்மனம் மாறாப் பச்சிளங் குழவிகளும் வான்மதியின் வனப்பில் ஈடுபட்டுக் களிப் படைவதை நாம் இன்றும் காணலாம். எல்லா நாட்டுக் கவிஞர்களும் சந்திரனின் அழகில் தம் உள்ளத்தைப் பறி கொடுத்து இனிய பாடல்களை இயற்றியுள்ளனர். கவிமணி வானவெளியில் உலவும் வான்மதியை நோக்குகின்றார். பன்னிரண்டு பாடல்கள் பிறக்கின்றன." வான்வெளியைக் கடலாகக் காண்கின்றனர். மீனினம் ஓடிப்பறக்குதம்மா! - ஊடே வெள்ளி ஒடமொன்று செல்லுதம்மா! வானும் கடலாக மாறுதம்மா! - இந்த மாட்சியில் உள்ளம் முழுகுதம்மா! (1) 7. இயற்கை இன்பம் சந்திரன் - பக்.74