பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் 卡 2葛9 → என்ற பாடலில் அந்தக் கடலில் வெள்ளியோடம் ஒன்று செல்வதைக் காண்கின்றார். இதனையே, மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே - ஒரு வெள்ளியோடம் போலவரும் வெண்ணிலாவே: (1) என்று பின்னர் வழிமொழிகின்றார். ஒரு பாடலில் வானத் தில் முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ? அல்லது முத்து விதானத்தைத் தேவர் அமைத்தனரோ? வான்மதிக்குத் திரு மணமோ? அத்திருமணத்தில் 'பட்டணப் பிரவேசம்' போல் சந்திரன் பவனி வருகின்றானோ? என்று வினவுகின் றார் (2). பின்னர் ஒரு கண்ணியில் ஆதாரம் ஒன்றில்லாமல் அந்தரத்தில் நிற்பதேனோ? என்றும் சொந்த இடம் இல் லாததால்தான் சுற்றித் திரிகின்றாயோ? என்று பிறிதொரு கண்ணியிலும் வினவுகின்றார் (12, 13). இரவைப் பகலாக்கும் அற்புத ஆற்றலைப் பெற்றுள் ளது நிலவு. இளைப்பையும் ஒட்ட வல்லது அது. இதனை, இரவைப் பகலா யியற்றுதம்மா! - வெப்பம் இல்லா திளைப்பெல்லாம் ஒட்டுதம்மா! அரவம் விழுங்கினும் அஞ்சாதம்மா! - எங்கள் ஆண்டவன் சூடும் மணியே அம்மா! (10) என்று ஒரு பாடலில் முன்மொழிகின்றார். பின்னர், இரவையும் பகலாக்கும் வெண்ணிலாவே! - உன்னை இராகுவும் விழுங்கிடுமோ? வெண்ணிலாவே (4) என்று பிறிதோர் கண்ணியில் வழிமொழிவார். இரண் டிலும் இராகு சந்திரனை விழுங்கும் புராணக் கதையும் சந்திர கிரகணம் தோன்றும் காரணமும் குறிப்பிடப் பெறு கின்றன. 3. வெண்ணிலா-1 - பக்.76