பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 220 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு அமாவாசையன்று சந்திரனை இருள் விழுங்குகின் றது; பெளர்ணமியன்று இருளை நிலவும் விழுங்கி விடு கின்றது. போட்டா போட்டியில் இருவருக்கும் தோல்வி யும் வெற்றியும் மாறிமாறி வருகின்றன. இதனை, இருளதனை விழுங்கவல்ல வெண்ணிலாவே - உன்னை இருள்விழுங்கும் சூழ்ச்சி யெதோ? வெண்ணிலாவே (19) என்ற கண்ணியில் குறிப்பிடுகின்றார். சந்திரனில் கறையொன்று தென்படுகின்றது. அத னைக் குன்றும் குகைகளும் என்பதாகக் குறிப்பிடும் அறிவி யல். அதனை முயல் என்றும் கூனக் கிழவி என்றும் குறிப்பிடும் புராணம். இவற்றை, அம்புலிக் கூட்டில் முயல்வருமோ? - ஈதோர் அண்டப் புளுகோ? அறியேன் அம்மா! பம்பி யெழுமலை அங்குளதும் - மேலைப் பண்டிதர் கண்டகனவே அம்மா! (5) கூனக் கிழவி நிலவினிலே - ராட்டில் கொட்டை நூற்கும்பணி செய்வதைஇம் மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி மாமதி யோங்கி வளருதம்மா! (6) என்று முன் மொழிகின்றார். இவற்றையே பின்னர், பூமியின் உருநிழலோ? வெண்ணிலாவே - அது போகாக் குறுமுயலோ? வெண்ணிலாவே (9) குன்றும் குகைகளுமோ? வெண்ணிலாவே - அன்றிக் கூனக் கிழவிதானோ? வெண்ணிலாவே (10) என்ற இரண்டு கண்ணிகளால் வழிமொழிகின்றார். இவ்வி டத்தில் மண்டோதரி புலம்பலாக வரும் பாடல்களில்,