பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 222 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்று பூக்கள் முன் மொழிகின்றன. இக்கருத்தைச் சிறிது மாற்றத்துடன், மண்ணிலிருந்து பொருள்வரினும் - அதை மாற்றி மணம்பெறச் செய்திடுவோம்; கண்ணுக் கினிய நிறங்களெல்லாம் விண்ணிற் காணும் கதிரிடம் பெற்றிடுவோமே (1) ஆண் - பெண் திருமணத்தை முடித்து வைப்பதில் மலர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மலரின் மணமே மங்கைய சின் திருமணம் ஆகின்றது! மங்கையர்க்கும் ஆடவர்க்கும் மணமுடிப் போமே! - மன்னர் தங்கமுடி மீதும் நாங்கள் தங்கி வாழ்வோமே! (3) என்று முன்மொழியும் மலர்களின் பேச்சை, மங்கைய ரோடு குமரரையும் - மனம் வாய்த்த மணம்செய்து வாழவைப்போம் தங்கமும் பொன்னும் மணிகளுமே - எம்மை தாழ்ந்து வணங்கமேல் தங்கிடுவோம் (3) என்ற பாடல் வழிமொழிதலாக அமைந்து நமக்கு மகிழ்ச்சி பூட்டுகின்றது. மலர்கள் ஈசனது திருவடிகளில் கிடக்கும் பேறு பெற் ஈசனருள் வேண்டிநிதம் இணையடி போற்றி - நல்ல வாசமெழு துபதீபம் வழங்கி நிற்போமே! (5) என்ற கருத்தை,