பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் 223 میس -- ஈசன் அடியில் பணிந்திருப்போம் - அவர் எந்து முடிமீதும் ஏறிநிற்போம்; பூசனை செய்யும் அடியவரின் - உள்ளம் பொங்கு களிப்பெலாம் காட்டி நிற்போம் (4) என்று வழிமொழிவதுபோல் அமைந்துள்ளது இப்பாடல். மலர்கள்பற்றிய பாடல்கள் படிப்போர் மனத்திற்கு மன நிறைவு தருவனவாக உள்ளன. சூரியகாந்தி" ஒர் அற்புதமான மலர். சூரியனை நோக்கிக் கொண்டே திரும்பும் தன்மையது. செங்கதிர் செல்லும் திசையது நோக்கி, - உன் செல்வமுகம் திரும்புவதேன்? மங்கையே உன்மணவாளனாகில் - அவன் வார்த்தை யொன்று சொல்லிப் போகானோ? (5) என்று வினவுகின்றாள் அந்தப் பெண். இதன் விதையிலி ருந்து எடுக்கப்பெறும் எண்ணெய் உடல்நலத்திற்கேற்ற வாறு உணவாகப் பயன்படுவது. இதனை நோக்கி ஒரு பெண் பேசும் பாவனையில் அமைந்தவை பாக்கள். பெண் வினவுகின்றாள்: "ஆகாய வீதியில் உலவி வரும் ஆதித்தன் உன் அன்பனா? வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ விண்ணில் கண் வைத்து நிற்பதற்குக் காரணம் என்ன? (1). நீயோ பொன்னிறமானவள்; பொலி வுடையவள். உன்னைப் போற்றுவதற்கேற்ற வடிவத்தை யும் பெற்றுள்ளாய். இன்னும் எந்த வரம் பெறுவதற்கு அவனை நோக்கித் தவம் செய்கின்றாய்? (2). ஆதித்தனின் மேனியை நோக்கிக் கொண்டிருக்கும் நின் கண்கள் கூசாவோ? (3), காலை நேரத்தில் கதிர் வீசி வரும் அவனைக் கண்டு களித்திருக்கின்றாய்; மாலையில் நின் முகம் வாடித் தளர்ந்திருப்பதற்கு என்ன வருத்தமடி? (4). 12. இயற்கை இன்பம் - சூரியகாந்தி பக்.79