பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卡 224 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஆசை நிறைந்தஉன் அண்ணலை நோக்கிட ஆயிரம் கண்களும் வேண்டுமோடி? பேசவும் நாவெழ வில்லையோடி? - கொஞ்சம் பீத்தற்.பெருமையும்வந்த தோடி? (6) மஞ்சள் குளித்து முகத்தை மினுக்கிக் கொண்டு இந்தப் பொடி வீசி நீ நிற்கும் நிலையை அந்த இலக்குமி வந்து கண்டால் சிரிப்பாளோ? அல்லது கண்ணிர் உகுப்பாளோ? யாருக்குத் தெரியும்? (7), உன் பெயர் சூரியகாந்தி என்கின் றனர். அதன் உண்மை இன்றுதான் எனக்குத் தெரிந்தது. இன்பம் அளித்திடும் இந்தப் பூவுலகத்தில் நினக்கு நிகர் எவரும் இல்லை, அம்மா (8). இந்த மலரைப் பற்றிய எட்டுப் பாடல்களும் படித்து மகிழத்தக்கவை; இன்பம் பெறத்தக்கவை. கிளி: பேசும் இப்பறவையைப் பற்றிய இருபத்திரண்டு பாடல்களும் பாடியவாய் தேனூறும் பான்மையில் அமைந் துள்ளன." அனைத்தும் நயமான பாடல்கள். கிளியின் இயல்புகளையெல்லாம் கூர்ந்து நோக்கிக் காட்டும் திறன் சொல்லால் உணர்த்த முடியாது. செம்பவழ வாயைத் - திறந்துநீ செப்பும் மொழி கேட்கில், உம்பர் அமுதமெலாம் - செவியகத்து ஒடி ஒழுகும்.அடி (13) கொம்பிற் கொலுவிருந்து - களித்துநீ கூவும் குரல்வருமேல், பம்பி எழுஞ்சோலை - எனக்குப் பரம பதம் அடியோ! (14) கண்ணுக் கினிமையாகி - எனதிரு காதும் குளிரச் செய்யும் வண்ணப் பசுங்கிளியே! குயிலும்உன் மாதவம் செய்ததுண்டோ! (20) 13. இயற்கை இன்பம் - கிளி - பக்.81