பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் + 225 号 என்று பாடியிருப்பது இயற்கையைக் கடந்தும் அதற்கு ஆதாரமாய் நின்றும் விளங்கும் தெய்விக சக்தியைக் கவி மணி அதுவித்கும் திறத்தை உணர்த்துகின்றது. குழந்தை யைக் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களும்" இவ்வகை அநுபவத்தின் பெருமையையே நமக்குப் புலப்படுத்து கின்றது. பூவின் அழகுனது முகத்தில் - என்றும் பொலிந்திடும் காரணம்என்? குழந்தாய்! தேவரும் கண்டறியாக் காட்சி - யானுந் தெளிவுறக் கண்டலன், அம்மா! (6) ஒரு தாய் குழந்தையை வினவுவது போலவும், குழந்தை அதற்கு விடையளிப்பது போலவும் அமைந்துள்ளன குழந் தையைப்பற்றி பன்னிரண்டு பாடல்களும். புன்னகை பூத்திடும் வேளை - ஒரு புதுமையும் காண்பதேனோ? குழந்தாய்! முன்னம் அரம்பையர்கள் மூவர் - ஒன்றாய் முத்தம் அளித்தகுறி, அம்மா: (7) ஆசைக் குழந்தாய் இச்செவிகள் - உன்னை அடைந்த வரலாறே துரையாய்? ஈசனும் பேசிடவாய் திறந்தான் - கேட்க இவையும் எழுந்தன என் அம்மா! (8) இன்பச் சிறுகரங்கள் இவைதாம் உனக்கு எவ்வாறமைந்தன என்குழந்தாய்! அன்பு வளர்ந்திவ் வுருவாகி - என்னை அண்டி அணைந்திருக்கு தம்மா! (9) என்ற பாடல்கள் தெய்விகக் கனிகள்; பாடிய வாய் அமு தூறும் அற்புதப் படைப்புகள். இங்ங்னம் ஒருவாறு கவி மணி இயற்கைவழி இன்பத்தைத் தாம் நுகர்ந்து நம்மையும் அநுபவிக்கச் செய்யும் பாங்கு காட்டப் பெற்றது. 14. ம.மா. உள்ளமும் உணர்வும் - குழந்தை (மாக்டோனபில்டு செய்த ஆங்கிலப் பாடலின் தழுவல்) கவி-16