பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மருமக்கள் வழி மான்மியம் கவிமணி அவர்கள் வரைந்த மருமக்கள் வழி மான்மியம் என்ற சமுதாய ஓவியம் ஒரு நூதன இலக்கிய வகையைச் சார்ந்தது. இலக்கியம் வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறினார் மேனாட்டுத் திறனாய்வாளர் ஒருவர். இக்கூற் றினை விளக்குவது போல் கவிமணியின் இந்தச் சொல்லோ வியம் அமைந்துள்ளது. இந்த இலக்கியத்தில் நகைப்பும் இகழ்ச்சியும் சோகமும் ஒன்றாகக் கலந்து அடிநாதமாக ஒலிப்பதை இந்த இலக்கியத்தை ஊன்றிப் படிப்போர் அறிந்து கொள்ளலாம். சேர சோழ பாண்டியர் இடையே நேர்ந்த அரசியற் குழப்பங்களும், உள்நாட்டுக் கலகங்களும் திப்பு சுல்தா னால் நிகழ்ந்த படையெடுப்புகளும் நாஞ்சில் நாட்டினருக் கும் பெருந்துன்பம் விளைவித்தன என்பது உண்மை. புறநானூற்றில் உள்ள பல குறிப்புகளால் சேர சோழ பாண்டியர்களால் நிகழ்ந்த குழப்பங்களை அறியலாம். இந்தப் பின்னணியை மனோன்மணிய ஆசிரியர் பேராசிரி யர் சுந்தரம் பிள்ளையும் தமது நாடக நூல்களில் குறிப்பிட் டுள்ளார். அரசியற் காரணங்களால் அநாதியாக மக்கள் தாய முறையைக் கொண்ட நாஞ்சில் நாட்டு வேளாளர் மருமக்கள் தாய முறையைக் கைப்பற்றினர். மருமக்கள் தாய முறை இந்த முறையின் முக்கிய கூறுகள் விசித்திரமானவை; விநோதமானவையும் கூட. ஒரு குடும்பத் தலைவனது வழிவழி வந்த சொத்து அவனது சகோதரியின் வாரிசுகளுக்குத் தாய முறைப்படி இறங்கும். அவனுடைய குழந்தைகட்கு உகந்துடைமை என்று வழங் கும் ஒரு சிற்றுரிமையைத் தவிர வேறு யாதொரு உரிமை யும் இல்லை. சகோதரியின் குழந்தைகட்கும் வழிவழி வந்த சொத்தைப் பாகப் பிரிவினை செய்து கொள்ளும்