பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-:- 227 -j உரிமை இல்லை. இந்நிலையில் குடும்பத் தலைவன் (காரணவன் என்ற பெயரால் காவியத்தில் வழங்கப்படு கின்றான்) இருதலைக் கொள்ளி எறும்பு போலாகின்றான். தன் குழந்தைகள் ஒரு பக்கமும், சகோதரியின் குழந்தைகள் ஒரு பக்கமுமாகவும் குடும்பத் தலைவனை அரித்துத் தின்பதுதான் நாஞ்சில் நாட்டுக் குடும்பத்தின் கதியாகி இருந்தது. இதனால் எப்போதும் நீதிமன்றத்தில் தீராத வழக்குதான். பெண்களின் பரிதாப நிலை: நாஞ்சில் நாட்டுப் பெண்க ளின் துயர நிலை சொற்களால் அளவிட முடயைாது. ஒருவர் பல பெண்களை மணந்து கொள்ளலாம். இங்கனம் பலருள் ஒருத்தியாய் வாழ்வது நடைமுறையாயிற்று. கன வனை இழந்த கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தாள். இவ்வுரிமையால் அவளது துன் பம் தீரவில்லை. மணந்த மனைவியைக் காப்பாற்றும் பொறுப்பு கணவனுக்கு இல்லாத நிலை. சேஷக்காரர்கட்கு (சகோதரியின் பிள்ளைகட்கு) காரணவனுடைய (குடும்பத் தலைவனுடைய) மனைவி மக்களைக் காப்பாற்ற வேண் டும் என்ற பொறுப்பு சிறிதும் இல்லாதிருந்தது. இதனால் பெண்டிர் நிலை பரிதாபகரமாய் இருந்து வந்தது. முற் போக்குள்ளவர்கள் அவகாச முறைபற்றிய சட்டத்தை மாற் றியமைக்க வேண்டும் என்று விரும்பினர். முற்போக்கற்ற ஒரு சிலர் அதனை இரகசியமாக எதிர்க்கத் தலைப்பட்ட னர். இதனால் நாஞ்சில் நாடு இரு பிளவுப்பட்டது. ஆயினும் முற்போக்காளரே இறுதியாய் வென்றவர்களாயி னர். கவிமணி முற்போக்காளர்களைச் சேர்ந்தவர். கவிமணியின் நோக்கம்: சட்டத் திருத்தம்பற்றிக் கவி மணி மேற்கொண்ட முயற்சி பெரியது; மிகப் பெரியது. மலபார் குவாட்டர்லி ரிவியூ என்ற இதழில் நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றி இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை அச்சமூகத்தினரின் கண்களைத் திறந்து விழிக்கச் செய்தது.