பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 228 米 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு தமது சமுதாயத்தினர் சுயநலத்தால் சீர்திருத்தத்திற்கு இணங்கார்களோ என்ற கவலையால் 'நாஞ்சில் நாட்டு வேளாளருக்கு ஒரு கோட்டை வினாக்கள் என்ற துண்டு அறிக் கைகளை வெளியிட்டார். தொடர்ந்து 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்ற சமுதாய ஒவியத்தை வரைந்து வெளியிட்டார். இதிலுள்ள அங்கதக் கூறு (Satire element) மக்களின் உள்ளத்தைத் தூண்டும் படியாக அமைந் தது. ஒவியத்தின் சுருக்கம்: நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண் தன் வாழ்வில் அநுபவித்த துயரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி வருந்துகின்றாள். ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவள் தம் பதினாறாம் அகவையில் ஒரு செல்வருக்கு ஐந்தாம் மனைவியாகின்றாள்; கணவன் இல்லத்தில் மாமியார், சக கிழத்திகள், மதினி முதலியோரால் அடைந்த துன்பங்க ளுக்கு அளவில்லை. சிறிது காலத்தில் இவளுடைய கணவ னுக்கும் அவனுடைய மருமகனுக்கும் மனத்தாங்கல் ஏற் பட்டு அது முற்றி நீதிமன்ற வழக்காய் முடிகின்றது. வழக்கு முடியுமுன்னர் கணவன் நோய்வாய்ப் பட்டார். அச்சமயம் அவனுடைய வாரிசுகள் (அவகாசிகள்) செய்த தொல்லைகளுக்கு அளவில்லை. இறக்குந்தறுவாயில் தன் மனைவி மக்கட்கு அடைக்கலம் தந்து காப்பாற்றுமாறு மருமகளிடம் வேண்டுகின்றார். அவர் இறந்ததும் மனைவி மக்கள் யாவரும் வீட்டிலிருந்து வெளியேற்றப் படுகின்ற னர். அப்பொழுது ஐந்தாம் மனைவியாக வந்தவள் தாம் அடைந்த தொல்லைகளையும் மருமக்கள் வழி அவகாச முறையில் பழித்துரைக்கும் பாங்கில் காவியம் அமைகின் ற்து. காவியம்: 1. குலமுறை கிளத்துப் படலம், 2. மாமி அரசிற் படலம், 3. கேலிப் படலம், 4. கடலாடு படலம், 5. பரிகலப் படலம், 6. நாகாத்திரப் படலம், 7. கருடாத்தி