பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் + 229 + ரப் படலம், 8. வாழ்த்துப் படலம், 9. கோடேறி குடி முடித்த படலம், 10. யாத்திரைப் படலம், 11. கும்பி எரிச்சல் படலம் என்ற பதினொரு படலங்களில் அமைந் துள்ளது காவியம். இதில் மருமகளின் துன்பம், மாமியாரின் தொல்லை, குடும்பத் தலவர்களின் கவலை, மருமகன் ஏச்சு, காரணவ ரின் பதிலடி, வழக்குகள், வக்கில் - எழுத்தர் திருவிளையா டல்கள், அமீனாவின் அட்டகாசம், பல்வகைப் பீசுகள், ஒட்டாண்டியான கதை முதலியவற்றை வட்டாரத் தமி ழில், நகைச்சுவை ததும்பும் பாங்கில், குத்திக் காட்டும் முறையில் எடுத்துக்காட்டும் கவிமணியின் பாணி வாசகர்க ளைக் கண்ணிர் உகுக்கச் செய்கின்றது. படிப்பு அதிகம் அறியாத ஒருப் பெண்மணியின் கூற்றாக இருப்பதால் வட்டாரத் தமிழ் பல இடங்களில் கையாளப் பெற்றுள் ளது. ஐந்தாம் மனைவி, மருமக் கள்வழி யென்னும் வனத்தில் புலிகள் குழுமோர் புல்வாய் போல வளையிற் படுமோர் மணிப்புறாப் போல ஒருத்தி ஏழை ஒருதுணை யில்லாள் தானும் மக்களும் தமிய ராகிப் பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப் புலம்பும் பொழுது ...... ..... பதவியும் பணமும் படிப்பும் இலாதேன் பஞ்சப் பாட்டெனப் பழித்திக ழாதீர், இலக்கண வழுக்கள் இருப்பினும் அவற்றை வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின் நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின் விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொள்மின்