+ 232 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பதுபோல் இவள் எங்கும் இருப்பாள். ஆணாய்ப் பிறந்தாள் அகிலம் ஆளுவாள். இவள் குணத்தை அறிந்தே எல்லாம் வல்ல எம்பெருமான் இவளை ஒற்றைக் கண்ணி யாக்கி னான். இவள் ஒரு கண்ணுக்கு இந்திரனின் ஆயிரம் கண்ணும் இணை ஆகா. இவளுடைய திறமையைப் பற்றிக் கூறுவாள்: ஊரை முழுதும் உழக்கால் அளப்பாள்; நாட்டை முழுதும் நாழியால் அளப்பாள்; நரியை முன்னம் பரியாம் ஆக்கின நாதனும் கண்டு நாண, இவளும் யானையைப் பூனை யாக மாற்றுவாள் பூனையை யானை போலக் காட்டுவாள் ஐயோ! உலகுக் கெங்கள் அருமை அத்தை திருவிளை யாடலை யெல்லாம் பத்துப் பரஞ்சோ திகளே பாடினும் முடியா தென்றால் மூதறி வில்லா அடியாள் சொல்லி அறியப் படுமோ? என்ற பகுதியில் இதனைக் காணலாம். இவள், இல்லத்தில் செய்யும் கொடுமையை, இரக்கம் சிறிதும் இன்றி எனக்கிவள் இடுவாள் வேலைகள் இரவும் பகலும் குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்; கும்பி யாரக் குடிக்க வொட்டாள் உண்ண வொட்டாள்; உறங்க வொட்டாள் உடலைக் கீழே சரிக்க வொட்டாள் அருமை மதினி அடிக்கடி அடிக்கடி சடைவா றுதற்குத் தாய்வீ டடைவாள்; மக்களும் பின்னால் வருவர்; புருஷன் இரண்டொரு நாள்கழித் தெட்டிப் பார்ப்பான்; வந்தால், போகும் வரையிலும் என்னை
பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/248
தோற்றம்