பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் -j- 233 + அம்மியில் வைத்துச் சம்பந்தி யாக அரைத்து விடுவாள்; ஐயம் அதற்கிலை என்னிரு மக்களும் இவருக் கேவல் செய்து செய்து துரும்பாய் தேய்ந்தார் என்று விளக்குகின்றாள். ஒரு சமயம் மருமகன் குடும்பத் தலைவனைக் கான வருகின்றான் வழக்குப் பேச. குடும்ப வருமானம் பற்றி வாக்கு வாதம் நடைபெறுகின்றது. பொய்க் கணக்குக் காட்டுவதாக புகார். வாய்க்கு வந்தபடி வசைகள் பாடி கோர்ட்டில் வழக்கு போடுவதாக வீராப்பு பேசி வீண் வம்பு செய்கின்றான். இதனை நாகாத்திரப் படலம் நயமாக விளக்குகின்றது. நாகக் கணை தொடுத்த மருமகன்மீது மாமன் கருடக் கணை தொடுக்க முற்படுகின்றான். வருமானத்திற்கு செல வுக் கணக்கு தருகின்றார் காரணவர். இடையே மருமகன் படிப்புக்கு செலவழித்ததைக் குறிப்பிட்டு எண்ணெய் செலவழிந்தது பிள்ளை பிழைத்த பாடில்லை என்ற எள் ளல் குறிப்பும் வெளிவருகின்றது. வழக்குப் போட்டு ஆண்டியாய்ப் போனவர்களின் பெயர்களைப் பட்டியலிட் டுக் காட்டுகின்றார். குடும்பத்துக்கு ஒரு குறையும் வராமல் காரியம் பார்க்கும் காரணவர்களில் தன்னைப் போல் இந்த நாஞ்சில் நாட்டுப் பன்னிரண்டு பகுதிகளிலும் ஒருவரும் இல்லை என்று வீரம் பேசி எழுகின்றார். பிரிந்து சென்ற மருமகன் தன் தந்தை வீரபத்திரப் பிள்ளையிடம் விளைந்தவற்றையெல்லாம் விரித்துரைத்து இடையிடையே சிறிது சேர்த்துக் கூறுகின்றான். வீரபத்தி ரப் பிள்ளை வெகுண்டெழுந்து காரணவர் வீடேகி தன் மகனைக் குறைத்துப் பேசியதற்குக் காரணவர் மகனை கண்டபடி ஏசிப் பேசி வட்டியும் முதலுமாகத் தந்து விடுகின்றார். இவற்றைக் கேட்ட காரணவர்,