பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 23夺 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு வைய வைய வைரக் கல்லும் திட்டத் திட்டத் திண்டுக் கல்லும் ஆகி இருக்கின்றார். வீரபத்திரப் பிள்ளையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பெறுகின்றது. இவர் நியமித்த வக்கீல் அண் டப் புழுகன் எழுத்தர் ஆனைப் பொய்யன். நோக்கம் காரணவனைப் பல காரணத்தாலே மாற்றுதல்". கோடேறி னால் குடி முடிந்து போகுமே என்று பரிதபித்த கவிஞர், புற்றை விட்டுப் புறம்போ காமல் பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில் தேரை குதித்துச் சென்று விழுவது நாகம் முன்செய்த நல்வினைப் பயனோ? தேரை முன்செய்த தீவினைப் பயனோ? ஏதெனச் சொல்ல எவரால் ஆகும்? என்று அழாத குறையாகப் பேசுகின்றார். நம்பர் பதித்த நாலாம் மாதம் சம்மன் வருகின்றது. நிலைமை வெளிச்சமாகின்றது. மேல் வீட்டிலிருந்து வெள் ளையம் பிள்ளை என்பார் ஒருவர் சில கூறி சமதானமாகப் போகுமாறு அறிவுரை கூறுகின்றார். நீதிபதியொருவர் தோற்றவர் வென்றவர் உருவங்களை சுவரில் வைத்த கதையையும், இரண்டு பூனைகள் வானரத்திடம் சென்று வழக்கு சொல்லி உள்ளதையும் இழந்த கதையையும் சான்றுகளாக வைக்கின்றார். கோடேறி குடி முடிந்தவர் பட்டியலையும் தருகின்றார். ஆகவே, வியாச்சியம் வேண்டா, வியாச்சியம் வேண்டா தேடின முதலைத் தெருவில் வாரி இறைக்க வேண்டா; இறைக்க வேண்டா என்று அறிவுரையும் தருகின்றார்.