உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணி - ஓர் அறிமுகம் -j- 9 + பாராட்டுகள்: கவிமணியின் நூல்கள் தமிழ் கூறு நல்லுல கில் உலாவத் தொடங்கியதும் நாடளாவிய பாராட்டுகளும் வந்து குவியத் தொடங்கின. அவற்றுள் சிலவற்றை ஈண் டுக் குறிப்பிடுவேன். 1. காரைக்குடிக்கருகிலுள்ள ஆத்தங்குடி என்ற சிற்று ரில் நகரத்தார் சார்பாக ஒரு பாராட்டு நடைபெற்றது (மே 11, 1943). 2. மதுரையில் பாரதியார் கட்டடம் திறந்து வைத்தார் (செப்டம்பர் 11, 1944). 3. செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் உபசரித்து (மே, 12, 1943) வெள்ளிப் பாத்திரங்கள் பரிசளித் தார். 4. திருநெல்வேலி கலை அன்பர்கள் கவிமணியை வரவேற்றுப் பாராட்டினர் (செப்டம்பர் 26, 1944). 5. கவிமணியின் 70-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவா கக் கொண்டாடப் பெற்றது. இதன் நினைவாக கவிமணி மலர் வெளியிடப் பெற்றது (1945). 6. நாகர்கோவிலில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கு கொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார் (1948). 7. கன்னியாகுமரியில் நடைபெற்ற தமிழ்நாட்டின் தென்குமரி எல்லை மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்புச் சொற்பொழிவாற்றினார் (சனவரி, 6, 1950). 8. டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை யில் பொன்னாடை போர்த்தப் பெற்று பாராட்டு பெற்றார் (அக்டோபர், 1950). 9. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கண்ணியப் பொறுப்பில் தமிழ்ப் பேராசிரியராக அமரும்படி வேண்டு கோள் விடுத்தது. (திசம்பர், 1950).