பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் + 239 + இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும் இணையா வாரோ? இணையா வாரோ?

  • s a ** タ* 8 》* ** ※s a & 6 % * % *

மூடர் முதலெலாம் வக்கில் முதலாம் என்று கூறி ஐயா! ராஜி ஆவதே உத்தமம்: ஐயா. ராஜி ஆவதே உத்தமம் என்று அறிவுரையும் பகர்கின்றார். பின்னர் விடைபெறு கின்றார். ஒரு வக்கீல் குமாஸ்தாவின் சதி. இவன் காரணவரின் நாலாம் மனைவியின் மாமன் மகன். வெள்ளையம் பிள் ளையின் அறிவுரையை அறிந்து வந்தவன். இவன் காரணவ ரிடம் வந்து தூபம்’ போட்டு வழக்கில் கட்டிவிடுகின்றான் காரணவரை. நாலரையாண்டு வழக்கு நடைபெற்றது. கார னவர் எல்லா நியமங்களையும் கைவிட நேரிட்டது. நோயும் ஆட்கொண்டது. ஒட்டாண்டியாகி கைலை ஆண்ட வனிடம் போய்ச் சேர்ந்து விடுகின்றார். இறுதிக் காலத்தில், உமையொரு பாக தீட்சிதரிடம் சிவதீட்சை பெற்றவர் திருவாசகம் ஒதுகின்றார். யாத்திரைப் பத்தில், ‘போவோம் காலம் வந்தது காண் போய்விட் டுடையான் கழல்புகவே' என்ற பகுதி எடுத்தோதியவுடன் காரணவர், "ஏங்கி யழுத எங்களை நோக்கினர் வாடி யழுத மக்களை நோக்கினர் கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர் கண்ணை மூடினர், கயிலை போய்ச் சேர்ந்தனர். 1. திருவன. யாத்திரைப் பத்து 1