பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 24G + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு வழக்கின் பலன்: இதனைப் பற்றி பெண்மணி இழித்துக் கூறுகின்றாள்: தீரா வழக்கும் சென்மப் பகையும் உற்றா ருக்குள் உண்டாக் கும்வழி இந்த வழி அப்பனைப் பிள்ளை அண்டவொட்டாது; பிள்ளையை அப்பன் பேண வொட்டாது; கணவனை மனைவி போற்ற வொட்டாது; மனைவியைக் கணவன் மதிக்க வொட்டாது; அண்ணனைத் தம்பி அடுக்க வொட் டாது; தம்பியை அண்ணன் தரிக்க வொட்டாது; மரும கனை மாமன் வஞ்சித்திடும். மாமனை மருமகன் வதைத் துக் கொல்லும்; குடியைக் குட்டிச் சுவராக்கிவிடும்; அடி பிடி சண்டையை அகலாமற் செய்துவிடும்; மனிதரைப் பேயாய் மாற்றிவிடும்; வயிற்றுக்கின்றி வறுமையில் தள்ளி நடைப் பிணமாக நடக்கச் செய்துவிடும். இவ்வழியில் வெளிச்சம் இராது; இருள் சூழ்ந்து கெடுக்கும். இந்த வழியில் கோட்டானும் ஆந்தையும் குடிகொண்டு கிடக் கும். நெஞ்சில் படர்ந்து நிரம்பிய முள் வழியாகும். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று ஒளவை சொல்மொழி அறியா மடவழி பெற்ற பிதாதன் பிள்ளைகட்குப் பழியும் பாவமும் பற்றிய நோயும் அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி ஒருகா சேனும் உதவாச் சதிவழி: இது, மக்கள் வழியென மதிக்கவொண் ணாது மருமக் கள்வழி யாகவும் மாட்டாது என்று விளக்குகின்றாள். வீடு, விளை நிலம், ஆடு, மாடுகள் அனைத்தையும் விற்றதோடன்றி இல்லத்தின் சாமான்கள், அணிகலன்களை