பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 242 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஐயோ, இவ்வழி ஆகாது ஆகாது: ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி மனிதர் செல்லும் வழியா யிடுமோ? என்று சீர்கேடு அடைந்த குடும்பம் சித்திரிக்கப் பெறுகின் இது!. இறுதியாக, இச்சிறுக் காவியம் சிலப்பதிகாரத்தை இளங்கோ முடிப்பது போல் கவிமணியவர்களால், கற்றவர் உளரோ கற்றவர் உளரோ! பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக் கற்றவர் உளரோ கற்றவர் உளரோ! அறிஞரும் உளரோ அறிஞரும் உளரோ வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும் அறிஞரும் உளரோ அறிஞரும் உளரோ! நீதியும் உளதோ! நீதியும் உளதோ: மாதர் கண்ணி, மாறா நிலத்தில் நீதியும் உளதோ! நீதியும் உளதோ! தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ! பொய்வழிப் பொருளைப் போக்குமருந் நிலத்தில் தெய்வமும் உளதோ தெய்வமும் உளதோ!! என்ற முறையில் முடிக்கப் பெறுகிறது. சிலப்பதிகாரத்தை இளங்கோ அடிகள் அறிவுரையால் முடிகின்றார். (வரந்தரு காதை காண்க) இந்தக் காவியம் ஓர் அபலைப் பெண் வாக்கால் முடிகின்றது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவ லனை இழந்து புலம்பும் பாணியைப் போல் (துன்ப மாலை காண்க) காரணிகளின் ஐந்தாம் மனைவி புலம்பும் பாணி அமைகின்றது. மற்றும் சிலப்பதிகார ஊர் சூழவரி" கண்ணகியின் குரல், பெண்ணிரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்! கொண்ட கொழுநர் உறுகுறை தாங்கு