பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் + 243 + பெண்டிரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்: சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்: ஈன்ற குழவி எடுத்து வளர்ச்சிக்கும் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்: வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்: என்று ஒலிப்பதைப்போல் ஈண்டும் ஒர் அபலையின் குரல் ஒலிக்கின்றது. சிலம்பில் பெண்டிர், சான்றோர் தெய்வம் குறிப்பிடப் பெறுகின்றனர். ஈண்டுக் கற்றவர், அறிஞர், நீதி, தெய்வம் குறிப்பிடப் பெறுகின்றனர். மதிப்பீடு: கதையை ஒர் அபலையின் வாயில் வைத்துக் கவிமணி பேசுவது அற்புதமாக அமைந்துள்ளது. காவியத் தின் நடையும் ஒரு சாதாரணப் பெண் பேச்சாக அமைந்தி ருப்பது படிப்போரின் மனத்தைக் கவருகின்றது. சீர்திருத் தம் விரும்பிய கவிமணியின் நோக்கத்தை நிறைவு பெறச் செய்வதற்கு இக்காவியம் சிறந்த கருவியாக அமைகின் றது. பெண் பாவத்தைப் பெரிதாக எடுத்துக் காட்டுகின்றது. நூல் முழுவதும் கையாளப் பெறும் வட்டார வழக்குச் சொற்கள் காவியத்தை இயல்புடையதாக்குகின்றன. எடுத் துக்காட்டாக ஏகாங்கி (= குழந்தையில்லாமல் தனியே இருப்பவள்), கண்டாங்கி (= சாயப் புடவை), குலுக்கை (= குதிர்), களரி கட்டுதல் (= சண்டையிடுதல்), காரணவர் (= குடும்பத் தலைவர்), மலரணை (= பேரிரவல், பினாமி), உகந்துடைமை (= நாஞ்சில் நாட்டு வேளாளரிடையே கணவனுடைய சொத்தில் மனைவி மக்களுக்குரிய பாக உரிமை), குடும்ப கோஷி (= குடும்ப காரியங்களுக்குத் துரோகம் செய்பவன்), பிலே (= பயலே), படிப்புரை (= ஒட்டுத் திண்ணை), ஆவலாதி (= பிராது), கொட்டாரம் (= அரண்மனை), படாகை (= ஒரு நாட்டின் சிறு உட்