பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 2ణీ క్షీ ! கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பிரிவு), போட்டும் (= போகட்டும்), அப்பமுத்து (= கொஞ்ச காலத்துக்கு முன் நாகர்கோயிலில் இருந்த ஒரு ஆடன், குடவிண்டி (= தொந்தி வயிறு), கைத்தாத்து (= ரசீது), அண்ணாவி (= உபாத்தியாயர்), தாட்பொதி (= காகிதக் கட்டு), மச்சம்பி (= அத்தான், அக்காள் கணவன்), வல்லம் (= தென்னங்கீற்றினால் செய்யப்பட்ட ஒரு வகைக் கூடை), குழியல் (= உண்ண உபயோகிக்கும் பாத்திரம்), நாலு கை யானை (= வக்கீல்), வஞ்சி (= கோவிலில் காணிக்கை செலுத்தும் உண்டிப் பெட்டி), ஏழரை நாட்டன் (= grnisốì 5min't cãi Eardley Norton என்ற பிரசித்திப் பெற்ற ஆங்கிலேய வக்கில்), முழுக்காளி (= முத்துக் குளிப்பவன்), பதிவு சாட்சி (= லஞ்சம் வாங்கிக் கொண்டு முன் பின் தெரியாத எந்தப் பத்திரத்திலும் சாட்சிக் கையெழுத்து போடவும் சாட்சி சொல்லவும் தயாராக இருப்பவன்), நடைபடி (= கோர்ட்டு நடவடிக்கை முறை), அர்ஜி (= பிராது), துவர்த்து முண்டு (= ஈரம் துவட்டுத்தற்குரிய துண்டு), விடுமுறி (= கணவனும் மனைவியும் பிரிந்து கொள்வதைக் குறிக்கும் பிரமான பத்திரம்), தட்டு (= மேல் மாடி), அன்னப்பால் (= உலையிலுள்ள கொதிநீர்), எனப் பேச்சி (= மலடி), அலந்து (= ஆசைப்பட்டு), சுவான தேவர் (= நாய்கள்) என்பவற்றைக் கூறலாம். பழமொழிகள்: இக்காவியத்தில் கையாளப் பெறும் பழ மொழிகள் கருத்துகளைத் தெளிவாக்கப் பயன்படுவதுடன் காவியத்திற்கு உயிரையும் ஊட்டுகின்றன. எ-டு. (1) தின்றவன் தின்றான் திருக்கணங்குடியான் தொண்ட மிறுப்பான் என்பது பழமொழி, செலவு செய்ய வன் ஒருவன்; ஆனால், சுகமும் அநுபவமும் பெறுபவன் வேறொருவன் என்பது பொருள். திருக்கணங்குடி - திருகு றுங்குடி (ஒரு வைணவத் திருப்பதி), தெண்டம் இறுப் பான் வரியைக் கொடுப்பான்.