பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 246 4. என்பது. இது பொருத்தமான இடத்தில் ஆளப் பெற்றுள் ளது. (7) பட்டினத்தடிகளின் திருஏகம்ப மாலையிலுள்ள ஒரு பாடல்: ஊரும் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல; பெண்டிர் சதமல்ல; பிள்ளைகளும் சீரும் சதமல்ல; செல்வம் சதமல்ல தேசத்திலே யாரும் சதமல்ல; நின்தாள் சதம்:கச்சிஏ கம்பனே (227) என்ற பாடல் பொருத்தமான இடத்தில் ஆளப் பெற்றுள் ளெது. இங்ங்னம் பழமொழிகளும் இலக்கியக் குறிப்புகளும் ஏற்ற இடங்களில் அமைந்து காவியத்திற்குப் பொலிவூட்டு கின்றன. 'இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடி என்பது ஒரு மேனாட்டுத் திறனாய்வாளரின் கூற்று; அது வாழ்க்கை யின் திறனாய்வு என்றும் சொல்லப்படும். இந்தக் காவி யம் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மக்களின் வாழ்க்கை யின் கண்ணாடியாக திறனாய்வுப் போக்கில் அமைந்துள் ளமை தெளிவு.