பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பாடலில் படிமங்கள் "படிமம் (Imagery) என்பது சொற்களால் கவிஞன் புலன்கட்குக் கவர்ச்சியுடையதாகச் செய்யும் ஒருவகை உத்தி. புலன்களின் மூலம் படிப்போரின் எழுச்சிகளையும் அறிவினையும் கிளர்ந்தெழச் செய்ய இயலும்; இதனைக் கருதியே கவிதையில் படிமம் கையாளப் பெறுகின்றது" என்று கூறுவர், பர்ட்டன் என்ற ஆங்கிலத் திறனாய்வாளர் கவிதைத் திறனாய்வு என்ற தமது நூலில். மேலும் அவர் கூறுவார்: “புலன்கட்கு முறையீடு செய்வதற்கேற்ப படி மங்கள் வகை செய்யப் பெறுகின்றன; கட்புலப் படிமங் கள, செவிப்புலப் படிமங்கள், சுவைப்புலப் படிமங்கள், நாற்றப்புலப் படிமங்கள், நொப்புலப் படிமங்கள், அல் லது தொடுபுலப் படிமங்கள், இயக்கப்புலப் படிமங்கள் (Kinesthetic images), LogL custo L14 lossessir (conventional images) என்பவையாகும்' என்று. எண்ணத்திற்கும் புலன் காட் சிக்கும் குறியீடுகளாக இருப்பவை சொற்களாகும் என் பதை நாம் அறிவோம். ஒரு கவிதையைப் படிக்கும்போது அக்கவிதையிலுள்ள சொற்கள் அல்லது சொற்கோவைகள் சிலபல படிமங்களை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. புலன்களின் மட்டத்தில் தூண்டல்கள் (Stimul) செய்வதைப் போலவே படிமங்களும் கருத்து நிலைச் செயலில் (ideationally) நம் புலன்களைத் தூண்டி நம்மிடம் கவிதையதுபவத்தை எழுப்பிக் கவிதையைத் துய்த்து மகிழ்வதற்குத் துணையாக அமைகின்றன. மேலும் சில சொற்கள் நம்மிடம் 'கட்டுண்ட படிமங்களையும்(Ted images), விடுதலைப் படிமங்களையும் (Free images) எழுப்பி விடுகன்றன. இவையும் கவிதையை நுகர்வதற்கு இன்றிய மையாத கூறுகளாக (Sine Cuo Non) அமைகின்றன.