பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

啤 254 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இஃது அழகம்மை ஆசிரிய விருத்தம். இதில் 'சாடுதல், 'குதித்தல், ஒடுதல்', 'அலைதல் ஆகியவை இயக்கப்பு லப் படிமங்கள். பறக்கும் குருவியோடென் - உள்ளம் பறந்து பறந்து திரியும்; கறக்குப் பசுவைச் சுற்றி - அதன் கன்று போலத் துள்ளும் (47) இஃது இலக்கியம்' என்ற பகுதியில் வரும் கவிதை பற்றியது. இதில் "பறத்தல்', 'திரிதல்', 'துள்ளுதல்: இயக் கப்புலப் படிமங்கள். அலைமேலே அலைவந்து மோதுமே,அடா - அலை அழகான முத்தையள்ளிக் கொட்டுமே,அடா! மலைமேலே மலைவளர்ந் தோங்குமே.அடா - அதை வனங்கள் அடர்ந்தடர்ந்து குழுமே.அடா (103) இது பட்டிக்காட்டான் வாயிலிருந்து வருவது. இதில் மோதுதல், அள்ளிக் கொட்டுதல் என்பவை இயக்கப் புலப் படிமங்கள். ‘சுதந்திரப் பாட்டில் உள்ளம் துடிது டிக்குதடா பதமெ ழும்புதடா - கையும் படப டக்குதடா (117) இதுவும் பட்டிக்காட்டான் வாயில் வருவது. துடிதுடித் தல், பதம் எழும்புதல்", "படபடத்தல்: ஆகிய இவை இயக்கப்புலப் படிமங்கள். கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்குநான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன் (290)