பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடலில் படிமங்கள் 卡 255 + இஃது ஆறு பற்றி வரும் பாடல். இதில் குதித்து வருதல்', 'கடந்து வருதல்', 'இறங்குதல்', 'தவழ்ந்து தவழ்ந்து வருதல் ஆகிய இவை இயக்கப்புலப் படிமங்கள். புனைந்த சித்திரம்போல் வண்ணத்துப் பூச்சி சுற்று தம்மா! துணைவன் இல்லாமல் - யானும் அதைத் தொடர்ந்து செல்லேன்,அம்மா! (464) இது முதல் துயரம் என்பதில் 'பிள்ளை' பற்றியது. இதில் 'வண்னத்துப் பூச்சி சுற்றுதல்’, ‘தொடர்ந்து செல்லுதல்” இவை இயக்கப்புலப் படிமங்கள். கலவைப் படிமங்கள்: பெரும்பாலும் படிமங்கள் தனித்து வருதல் அருமை; அவை கலவையாகவே அமைந்து அவற்றிற்கு மெருகூட்டுகின்றன. கவிமணியின் பாடல்களில் இவற்றைக் காண்போம். மணமும் நிறமும் இல்லாவோர் மலரே எனினும், ஐயாநின் பணியிற் சேரத் தாழாது பறித்துக் கொள்ள வேண்டினனே (16) இஃது அஞ்சலியில் ஒரு பாடல். இதில் மணம் நாற்றப் புலப் படிமம்; நிறம்' என்பது கட்புலப் படிமம்; இவை இரண்டும் இணைந்து பாடலுக்கு மெருகூட்டுகின்றது. அம்பொற் குழைகள் மிசையாட, அரைஞாண் சதங்கை இசைபாட, நம்பன் கண்ணன் அழகியவோர் நடனாய் வந்து நடிக்கின்றான் (159)