பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 256 米 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இஃது அன்பின் வெற்றி என்ற மீரா பற்றிய சரித்திரக் கவிதையில் ஒரு பாடல். இதில் ஆடுதல் நடித்தல் இயக்கப் புலப்படிமங்கள்; பாடுதல் செவிப்புலப் படி மம். இவை மூன்றும் இணைந்து பாடலைச் சிறப்பிக்இன் நன. தேனும் தினையும்பாவில் உண்ணலாம்.அடா - மிகத் தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம்.அடா! காணக் குயிலிசையும் கேட்கலாம்,அடா - ஊடே களிவண்டு பாடுவதும் கேட்கலாம்,அடா (105) இது பட்டிக்காட்டான் வாயில் வருவது. தேன்', 'தினை, முக்கனி சுவைப்புலப் படிமங்கள்; 'வண்டு பாடுதல்: செவிப்புலம் படிமம். இவை கலந்த கலவைப் படிமம் கவிதைக்கு மிகு சுவையூட்டுகின்றது. எத்திசையும் மேகங்கள் எழுந்து மின்னி இடிமுழங்கிப் பெருமழையும் பெய்யக் கண்டோம்; தத்திவரும் குளிர்வாடை வீசக் கண்டோம்; தவளையொடு சாதகமும் கத்தக் கண்டோம் சித்தமகிழ் பூங்குயிலும் கூவக் கண்டோம்; பூரீநந்த குமரன் வர இன்னும்கானோம்; பத்தியொடு பணிகின்றேன்; கிரித ரா!உன் பாதமலால் வேறுதுணை அறியேன்,ஐயா (162) இது மீரா சரிதையில் ஒரு பாடல் இதில் மின்னுதல் கட்புலப் படிமம், இடிமுழங்குதல் செவிப்புலப் படி மம்; மழை பெய்தல் இயக்கப்புலப் படிமம், குளிர்வா டை நொப்புலப் படிமம்; வாடை வீசுதல் இயக்கப்புலப் படிமம்; தவளை சாதகம் கத்துதல் செவிப்புலப் படிமம்; 'பூங்குயில் கூவுதல் செவிப்புலப் படிமம். இங்ங்னம்