பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 262 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு விழும் அருவி நீரைப் பற்றுவது போலாகும். அஃது அண்ணாமலையான் தன்மையைத்தான் கொண்டுள்ளது; அவனது அடியையும் முடியையும் மாலும் அயனும் காண முடியாது அல்லலுறுவதைப் போல் கவிதையின் இயல்பை ஆய்வாளர் கண்டறிய முடியாமல் திண்டாடுகின்றனர். எனினும் இம்முயற்சிகள் பயனற்றவை அல்ல. 'கவிதையின் இயல்புகள் காலந்தோறும் இடந்தோ றும் சூழ்நிலைக்குத் தக்கவாறு வேறுபடுகின்றன. அவற றுள் ஒரு சில அம்சங்களையே ஒவ்வோர் ஆய்வாளரும் அறிய முயல்வது. ஆனால், தாம் கூறுவதே எல்லா வகை யாலும் முற்ற முடிந்த உண்மையெனத் தாமும் நம்பி வாசகர்களையும் மயங்கச் செய்து விடுகிறார்கள். இக்குறை யினால் இன்னோரது நூல்கள் பயனற்றுப் போய் விட வில்லை. கவிதை இயல்புகள் ஒரு சிலவற்றின் முக்கியத்து வம் நன்றாக நம் மனத்தில் ஆழப்பதிந்து விடுவதற்கு இவ்வித நூல்கள் உதவுகின்றன. அன்றியும் இந்நூல்களை நாம் கற்குந்தோறும் நமது அறிவு விசாலமடைகின்றது. கவிதையதுபவம் மேலும் மேலும் முதிர்வதற்கு இடம் ஏற்படுகின்றது." கவிமணி பெரிய காவியம் ஒன்றையும் படைக்க வில்லை. அவர் படைத்துள்ள ஆசிய சோதி', 'உமர்க்கய்யாம் பாடல்கள்', 'மருமக்கள் வழி மான்மியம் ஆகியவை சற்றுப் பெரியவை. இவற்றுள் முதலிரண்டும் ஆங்கிலக் கவிதைக ளைத் தழுவி ஆக்கப் பெற்றவை. இவற்றின் கருத்து தமிழ் மக்களுக்கு ஏற்ற முறையில் மாற்றப் பெற்றுள்ளது. தமிழ்க் கவிதைகட்கு ஏற்றபடியாகவும், அக்கருத்தோடு ஒத்த பிற கருத்துகளும் சேர்க்கப் பெற்றுள்ளன. எனவே, இக்கவிதை கள் ஆங்கில மூலத்தின் கருத்தினைப் பொதுவாக எடுத்துக் கொண்டு தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற முறையில் தமிழ் 6. வையாபுரிப் பிள்ளை - தமிழ்ச் சுடர்மணிகள் - தே.வி.பிள்ளை - பக்.331.