பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு + 263 * மக்கள் அநுபவிக்கும் பாங்கில், வேண்டிய மாற்றங்கள் செய்து அழகுற அமைக்கப் பெற்றவை யாகும். மொழி பெயர்க்க எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கவிதையிலும் கவிமணியின் ஆன்மா புகுந்து நின்று கவிதைக் கருத்தின் வடிவினைத் தானே மேற்கொண்டு புதிய படைப்பாகத் தோன்றியுள்ளது என்பதே உண்மையாகும். நாரத முனிவன் கூறிய நாரணன் விளையாட்டை வான்மீகி வடமொழியில் கூறியதைக் கம்பன் தமிழ்ப் பண்பாட்டிற்கேற்பத் தமிழில் செப்புவதைப் போல கவிமணியின் படைப்புகள் அமைந் துள்ளன என்று சொல்லி வைக்கலாம். இவர் தமிழாக்கம் செய்த முதல் துயரம் 'வண்மை கண்டவர் யார்? பிற சிறிய கவிதைகளும் அழியா உயிர்ப்பு மூன்று விஷயங் கள் போன்ற பிறச் சிறிய கவிதைகளும் இங்கனமே அமைந்துள்ளன. இக்கவிதைகளில் மொழிபெயர்ப்பு என்ற உணர்ச்சியே உண்டாவதில்லை. நமது நாட்டில் நமது தாய்மெழி மரத்தில் இயற்கையாய்க் காய்த்து சுவைபடக் கனிந்த கணிகளே இவை என்று சொல்லத் தக்கனவாகவே அமைந்துள்ளன என்று கூறுவதில் யாதொரு தவறும் இல்லை. கவிமணியின் சிறு பாட்டுகளில் சில முதல் தரமா னவை. கிளி, மலர்கள், குழந்தை, ஆறு முதலியவை சிறந்த நயமுடையவை. கற்றோர்க்கு இன்பம் தரவல் லவை. கவிதைகளைச் சுவைக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பாடல்களை மாணிக்கங்களாக மதிப்பார்கள். ஒரு நல்ல கவிதைக்குரிய குணமும், நயமும், இன்பத்தை உண்டாக்க வல்ல அகத்தெழுச்சியும் கவிதையின் கட்டுக் கோப்பும் கவிமணியின் பாடல்களில் மிளிர்கின்றன. "மலரும் மாலையும் என்ற தொகுதியில் சமூகம் என்ற பகுதியில் காணப்பெறும் கவிதைகள் சிறப்பாக இருந்த போதிலும் அவை அரசியல், சமூக, சீர்திருத்தப் பிரசாரத்