பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 13, * வண்ணக் கிளியே! முத்தந்தா, வாசகக் கொழுந்தே முத்தந்தா' இந்தப் பாடல் மழலையருக்குப் பொருத்தமான பாடல் நுகர்வினையால் கருவறையில் பத்துத் திங்கள் கிடந்து இப்பூவுலகிற்கு வரும் குழந்தையின் முத்தத்தைப் பெற் றோர்களும் உற்றோர்களும் பெறுவதற்கு ஆர்வம் காட்டும் போது அனைத்துலக நாயகனான முருகன் குழந்தையாகப் பிறக்கும் போது அவனது முத்தத்தை ஆன்ம கோடிகள் பெறுவதற்கு அலைவதைச் சொல்ல வேண்டுமோ? பிள் ளைத் தமிழ் ஆசிரியர்கள் முத்தப் பருவத்தின் முருகனது முத்தத்தை வருணித்து அநுபவிப்பது சொல்லுந்தரமன்று. பகழிக் கூத்தர் முருகனது முத்தத்தைப் பெற ஆர்வ முற்றிருப்பதை அவரது கவிதை காட்டுகின்றது. 'ஒலிக் கின்ற அலைகள் நிறைந்த கருப்பமுள்ள வலம்புரிகளை எடுத்தெறிய, அவை கரையில் தவழ்ந்து சென்று கருவுயிர்க் கும் முத்துக்களுக்கு விலையுண்டு; மும்மதங்களைப் பொழியும் யானைகளின் பிறை மருப்புகளில் பிறக்கும் தரளத்திற்கும் விலையுண்டு; நெற்பயிர்கள் வளர்ந்து முதிர்ந்து சாய்ந்த நிலையில் ஈனும் குளிர் முத்தினுக்கும் வில்லையுண்டு; மேகங்கள் தரும் நித்திலங்களுக்கும் விலையுண்டு; முருகா! நின் கனிவாய், “முத்தம் தனக்கு விலையில்லை; முருகா முத்தம் தருகவே: முத்தம் சொரியும் கடல் அலைவாய் முதல்வா முத்தம் தருகவே' இவ்வாறு முருகனை வேண்டுகின்றார் கவிஞர். 2. திருச்செந்தூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் - முத்தப் பருவம்