பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை - சிறுவர் இலக்கியம் -j- 17 4 என்ற பாடலில், கம்பன், திருமால் பற்றிய குறிப்புகள் வருகின்றன. தேவாரப் பாகும் திருவாசகத் தேனும், நாவாரஉண்ண எம்மான் நன்மகவாய் வந்தானோ? (14) என்ற பாடலில் தேவார திருவாசகக் குறிப்புகள் வருகின் றன. நாலா யிரக்கவியின் நல்லமுதம் உண்டிட,மால் பாலாழி நீங்கியொரு பாலகனாய் வந்தானோ? (18) என்ற பாட்டில் 'நாலாயிரம்" பற்றிய குறிப்பு வருகின்றது. இவ்விடத்தில் சீர்திருத்தக் கவிஞரான பாவேந்தரின், சொற்கோவில் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது கற்கோவில் உட்புறத்தில் கால்வைத்தது எவ்வாறு சகத்திர நாமம்! தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச் செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோயி லின்பால்?" என்ற பாடல் நினைவிற்கு வருகின்றது. இது நிற்க. தவிர கவிமணியின் தாலாட்டுப் பாடல்களில் முரு கன், கண்ணன் ஆகியோரும் வருகின்றனர். இவர்தம் இளமைத் திருவிளையாடல்கள் சிறுவர்களின் மனத்தைச் 7. பாவேந்தர் - தமிழியக்கம் பக்.28. கவி-3