பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 16 -i- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பாலமுதம் உண்டுதமிழ்ப் பாமாலை பாடி,இந்தத் தாலம் புகழவரும் சம்பந்தன் நீதானோ? (9) என்ற பாடலில் ஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடப் பெறுகின்றார். கொன்றையணிந் தம்பலத்தில் கூத்தாடும் ஐயனுக்கு வன்றொண்ட னாக வளர்ந்தவனும் நீதானோ? (10) என்ற இப்பாடலில் சுந்தரமூர்த்தி அடிகள் குறிப்பிடப் பெறுகின்றார். கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ? (11) என்ற பாடலில் மணிவாசகப் பெருமான் குறிப்பிடப் பெறுகின்றார். பூவில் அயனும்,இந்தப் பூமீது வள்ளுவர்தம் பாவின் நயம்உணரப் பாலகனாய் வந்தானோ? (12) என்ற பாடலில் வள்ளுவர் பற்றிய குறிப்பு வருகின்றது. கம்பர் கவியின் கவியமுதம் உண்டிடமால் அம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ? (13)