குழந்தை - சிறுவர் இலக்கியம் + 15 普 இங்ங்னம் பிள்ளைத் தமிழ் நூல்கள் குழந்தைக் கடவுளின் முத்தத்தைப் பற்றிச் சிறப்புடன் பேசுகின்றன. தாலாட்டு: கல்வியறிவில்லாத மகளிர் ஏதோ தாலாட் டுப் பாடல்கள்" பாடுவதை இன்றும் காணலாம். பெரியாழ் வார் 'தாலே தாலேலோ (தால் நாக்கு) என்று சொல்லிக் குழந்தைக் கண்ணனை தாலாட்டுவதைக் காணலாம். பிள் ளைத் தமிழ் இலக்கணம் தாலப்பருவம் என்று இதனைக் குறிப்பிடும். கவிமணி தாலாட்டுப் பாடல்கள் பல பாடி யுள்ளார். தாலாட்டுப் பாடல்கள் பல ஞானச்செல்வர்களை யும், பல கடவுளர்களையும் அறிமுகம் செய்வனவாக அமைந்திருக்கும் நேர்த்தி அற்புதம். நெஞ்சிற் கவலையெலாம் நீங்கத் திருமுகத்தில் புன்சிரிப்பைக் காட்டி.எம்மை போற்றும் இளமதியோ? (6) பல்லக்கில் அம்மான் பவனி வரும்பொழுது மெல்ல மடியிருந்து விளையாடும் பைங்கிளியோ? (7) என்பன போன்றவை பொதுவானவை. பூமாலை வாடும்,மணம் பொன்மாலைக் கில்லையென்று பாமாலை வைத்தீசன் பாதம் பணிபவனோ? (8) இதில் பாமாலை வைத்து ஈசன் பாதத்தைப் பணிந்தவர் அப்பர் பெருமான் என்பது குறிப்பிடப் பெறுகின்றது. 6. ம.மா. தாலாட்டு
பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/31
Appearance