பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை சிறுவர் இலக்கியம் -j- 19 + சப்பாணி கொட்டித் தளர்ந்தனையோ? அல்லதுன்றன் கைப்பாவை காக்க கலங்கி அழுதனையோ? (22) தித்திக்குந் தேனும் தினைமாவும் கொண்டுன்றன் அத்தை வருவாள், அழவேண்டாம்; கண்மணியே! (23) மாங்கனியும், நல்ல வருக்கைப் பலாக்கனியும் வாங்கியுன் அம்மான் வருவார்; அழவேண்டாம் (24) கண்ணுறங்கு: கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு (25) என்கின்ற பாடல்கள் பாடிய வாய் தேனுறச் செய்கின்றன. பாடல்கள் யாவும் பக்தி இலக்கியங்களை அறிமுகம் செய்வனவாயும், ஞானச் செல்வர்களையும், மாபெருங் கவிஞர்களையும் அறிமுகம் செய்வனவாயும் அமைந்துள் ளன. தமிழின் குழைவும் இனிமையும் பாக்களில் ததும்பி நிற்கின்றன. இவ்விடத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் தாலாட்டுப் பாடல்களையும் நினைவு கூரலாம். அவர் ஆண் குழந்தை பெண் குழந்தை இவர்கட்குத் தனித்தனியே பாடல்கள் பாடியுள்ளார். ஆண் குழந்தைக்கு சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே! கண்ணுறங்கு!