பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ £3 -ī- கவிடினியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு பேர்க்கவந்த வீரா இளவீரா! வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும் மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த கடந்த தோளா இளந்தோள கண்ணுறங்கு எல்லாம் அவன்செயலே என்று பிறர்பொருளை வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும் காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும் வேர்ப்பீர், உழைப்பீர்என உரைக்கும் வீணருக்கும் மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு பெண் குழந்தைக்கு அன்னத்தின் துவி அனிச்ச மலரெடுத்துச் சின்ன உடலாகச் சித்திரித்த மெல்லியலே மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கர்ப்பூரப் பெட்டகமே! வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத் துண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி! தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே! எல்லாம் கடவுள்செயல் என்று துடைநடுங்கும் பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே! வாயிலிட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக் கோயில்என்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே! சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி.என்பார் செய்கைக்கு நாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு!