பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை - சிறுவர் இலக்கியம் -j- 21 + இவரது பாடல்களில் இறை மறுப்பு, சீர்திருத்தக் கருத்து கள் முதலியவை மிளிர்கின்றன. கவிமணியின் பாடல்கள் அழுகின்ற குழந்தையை உறங்க வைக்கும் பாணியில் அமைந் துள்ளன. பள்ளி எழுச்சி: குழந்தைகளைத் துயிலெழுப்புவது பற் றியும் சில பாடல்களை ஆக்கியுள்ளார் கவிமணி" அப்பா எழுந்திரையா! அரசே எழுந்திரையா! கொக்கொக்கே என்று கோழிஅதோ கூவுதுபார்: (1) காகாகா என்று காகம் பறக்குதுபார்! கிழக்கு வெளுக்குதுபார்! கிரணம் பரவுதுபார் (2) கறவைப் பசுவைஅதன் கன்றுசுற்றித் துள்ளுதுபார்: பால்குடிக்க வேண்டாமோ? பழம்தின்ன வேண்டாமோ? (4) பாடல்கள் எல்லாம் படித்திட வேண்டாமோ? சீக்கிரம் பள்ளிக்குச் சென்றிட வேண்டாமோ? (5) காலையும் ஆச்சுதய்யா! கண்விழித்துப் பாரையா! அப்பா எழுந்திரையா! அரசே எழுந்திரையா (6) 8. ம.மா.மழலை மொழி அரசே எழுந்திரு.