பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 22 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இப்படிச் செல்லுகின்றன பாடல்கள். இவை சிறுவனை தோக்கிப் பாடப் பெற்றவை. தாய்மார்கள் சிறுவனை 'ராஜா, ராஜா என்று விளிப்பதைப் பார்க்கின்றோம். கவிமணி அரசே!” என்று அவனை விளக்கின்றார். பேச்சுப் பயிற்சி: சற்றுக் குழந்தை வளர்ந்த நிலையில் தாயும் குழந்தைப் பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகட்குப் பேச்சுப் பயிற்சி தர வேண்டும். அப்போதுதான் குழந்தை யின் தாக்கு திருந்தும். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமி ழும் தாப்பழக்கம்' அல்லவா? இதற்கேற்ற முறையில் வீட்டுப் பிராணிகளை அழைக்கும் பாங்கில் சில பாடல்க ளைப் பாடியுள்ளார் கவிமணி. பேச்சுப் பயிற்சி தருவதற்கு ஏற்ற பாடல்கள்" தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி (1) முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி. (4) குழந்தைகளை இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு பகவுக்கு ஒரு குழுவும், கன்றுக் குட்டிக்கு ஒரு குழுவு மாகப் பெயரிட்டு முதலிரண்டு அடிகளை ஒரு குழு பாடி மூன்று நான்கு அடிகளை மற்றொரு குழு பாடுமாறு பயிற்சி தரலாம். 3. மழலை மொழி - பசுவும் கன்றும்