உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை சிறுவர் இலக்கியம் + 27 + உண்ட சோற்றை எண்ணி உயிரும் விடத் துணிபவன், மண்டலத்தில் நாய்போல் வாய்த்த துணை உண்டோ? (2) குழந்தை மனத்திற்கு ஏற்ற பாடல்கள் இவை. பாண்டியாடுதல்: சிறுமியர்கட்கு ஏற்ற விளையாட்டு. அவர்களை மனங்கவரும் விளையாட்டு. இத்தலைப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. பாங்கி தோழி, பங்கஜம்: பாண்டி யாட வாராயோ? பாட்டி எனக்குப் பரிசளித்த பல்லாங் குழியைப் பாரிதோ! (1) மாமா நேற்று வாங்கித் தந்த மாணிக் கத்தைப் பாரிதோ! அத்தை தந்த கட்டிமுத்தின் அழகை வந்து பாரிதோ! (2) சேரருக்கு மங்க ளங்கள் செப்பி விளை யாடலாம்; சோழ ருக்குச் சோபனங்கள் சொல்லி விளை யாடலாம்; (3) பாண்டி யர்க்குப் பல்லாண்டு பாடி விளை யாடலாம்: உண்ணும் பாண்டி யாடலாம். ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம் (4) திருமணத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் நலுங்கு முதலியவை நடைபெறும் போது இந்த விளை யாட்டில் விடுவார்கள். இதில் பழக்கமில்லாத அப்பாவி மாப்பிள்ளை பெரும்பாலும் தோற்று விடுவதே நடை