பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

事 $蒙 索 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கருதினார். விதைக்குள் எதிர்காலத்தில் பெரிய மரமாகும் ஆற்றல் சிறு வடிவில் ஆலமர வித்தில் அருங்குறள் போல் உள்ளுறைந்திருப்பதைப் Gustav Gou (Latent) பிற்காலத்தில் வெளிவர வேண்டிய பேராற்றல்கள் குழந் தைகளிடம் உள்ளுறைந்து கிடக்கின்றன என்று அவ்வறி ஞர் எண்ணினார். அவ்வாற்றல்களை வெளிப்படுத்தலே (Part கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். எனவே, புலன்கள் (Senses) வாயிலாகத் தான் கல்வி புகட்ட வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரும் புத்தகப் படிப்பை ஆதரிக்கவில்லை. இதனை வகுப்பறையில் ஒரு முறையாக வளர்த்தவர் மாணடிசாரி அம்மையார் என்ற கல்வி முறை வித்தகர். கல்வி உலகில் தலை சிறந்து திகழ்ந்தவர் ஃபிராபெல் என்ற செருமானிய அறிஞர். அவர் இயற்கை அன்னையும் மனிதனும் ஒன்றாக இருந்து கொண்டு இறைவனுடைய திருவுளத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று நம்பினார்." எனவே, குழந்தைகளின் ஆற்றல்கள் மலர்ச்சியடைதல் இறைவனின் திருவுளக் குறிப்புப்படி நிறைவேறுவதால் அவை தவறாகா என்று நம்பினார். ஆகவே, இயற்கையை யொட்டிக் கல்வி கற்பித்தல் நடைபெற வேண்டும் என்பது அவர் கருத்தாகும். அவர் கெள்கைப்படி பள்ளி என்பது குழந்தைகளின் பூங்கா. பள்ளியில் கல்வி பயிலும் குழந்தை கள் பூங்காவில் வளரும் செடிகள். குழந்தைகளைக் கண்கா ணிக்கும் ஆசிரியர் செடிகளைப் பாதுகாக்கும் தோட்டக்கா ான். எனவே, கற்கும் குழந்தைகள் தாமாகச் செயற்பட்டும் கருத்துகளைத் தாமாக வெளியிட்டும் வளர்ச்சியடைய வேண்டும் என்பது ஃபிராபெலின் விருப்பமாகும். 14. சித்தினை அசித்துடன் இணைத்தாய் சேர்ந்த பல்லுலகங்கள் சமைத்தாய்" என்பது பாதியார் வகக்கு.