பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை - சிறுவர் இலக்கியம் + 33 + அவற்றை அவர் பாட்டுகள் வாயிலாகவும் படைப்பாற்ற லின் துணை கொண்டும் எய்துவிக்கலாம் என்றும் கருதி னார். ஃபிராபெலின் கல்வி முறை கிண்டர் கார்ட்டன் முறை" என்பதாகும். கிண்டர் கார்ட்டன் (Kinder garten) என்ற செருமானியச் சொல் 'குழந்தைகளின் தோட்டம்' என்று பொருள்படும். ஃபிராபெல் குழந்தைகளின் இளமைப் பருவமே வளர்ச்சியின் முக்கிய பருவம் எனக் கருதினார். குழந்தையின் வளர்ச்சியிலும் இளந்தாவரத்தின் வளர்ச்சியி லும் ஃபிராபெல் சில பொதுவான வளர்ச்சிகளைக் கண் டார். இப்பண்புகளை ஆசிரியர் அறிந்திருத்தல் வேண்டும். தன்னியக்கம் என்பது, மனத்தின் முக்கியமான பண்பா கும். அது குழந்தைகளின் விளையாட்டின் மூலம் வெளிப் படுகின்றது. எனவே, குழந்தை விளையாட்டு மூலம்தான் முழு வளர்ச்சியடைய வேண்டும். ஃபிராபெல் பிற்கால மனிதனுக்குத் தேவையானவை அனைத்தும் குழந்தைப் பருவத்தில் விளையாட்டு வடிவாக வெளிப்படுகின்றன என்று கூறுகின்றார். எனவே, குழந்தைகட்கு விளையாட்டு முறையில்தான் கற்பிக்க வேண்டும் என்பது இவ்வறிஞரின் கருத்தாகும். குழந்தைகள் விளையாடுவதற்கு ஆசிரியர் உற்சாகம் ஊட்ட வேண்டும். விளையாட்டுகளில் காணும் நற்கூறுகளில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற அல்லது முறையற்ற கூறுகளைத் தவிர்த்தல் வேண்டும். குழந்தைகளின் தோட்டத்தில் உரிமை, விளையாட்டு, மகிழ்ச்சி ஆகிய மூன்று கூறுகள் இடம் பெறுதல் வேண் டும். அவ்வாறு இடம் பெற்றால்தான் குழந்தைகளின் உணர்வுகள் நன்முறையில் வெளிப்படும். அங்குப் பாட கவி-4