பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தேசியப் பாடல்கள் கவிமணியின் பாடல்கள் பெரும்பாலானவற்றில் தேச பக்தியின் இனிய மணம் கமழ்ந்து வீசவில்லை. தேசபக்தி இவரது பாடல்களை இயக்கவில்லை என்பதுதான் உண்மை. காரணம், இவர் தோன்றிய சூழ்நிலை அதற் கேற்ற உந்து விசையை நல்கவில்லை. பாரதியாருக்குத் தேச பக்தியும் சுதந்தர உணர்வும் துணை நின்றன போல வும், பாரதிதாசனுக்கு பெரியார் இயக்கம் உந்துவிசையை அளித்தது போலவும் கவிமணிக்கு எத்தகைய விசையும் அவர் வாழ்ந்த சூழ்நிலை அமையவில்லை. வரலாற்றுக் காலத்தில் வெள்ளையர்களின் தனிப் பேரரசைப் போல் மிக வலிமையும் பெருமையும் உடைய வேறொரு பேரரசு தோன்றியதில்லை. வெள்ளையரின் ஆட்சியில் நம் நாடு மிகவும் கீழடங்கி நின்றது. அடக்கு முறை பலமாகவும் உறுதியாகவும் கையாளப் பெற்றது. தம் நாட்டிலுள்ள ஆலை முதலாளிகள், துணி வணிகர்கள் இவர்களின் நன்மையைக் கருதி நம் நாட்டு மக்களுக்கு பல வாய்ப்புகள் அமையாது தடுத்தனர். தம் நாட்டுக் கப்பல் வணிகர்களின் முன்னேற்றத்தைக் கருதி நமது நாட்டில் கப்பல் முதலிய சாதனங்களை இயற்றுவதற்கு சிறிதும் இடந்தரவில்லை. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் வரலாறு நமக்கு நன்கு விளக்கும். அவருக்கு இழைத்த கொடுமைகளும் அவர் பட்ட சொல்லொணாத் துன்பங்களும் நமது நாட்டு மக்களின் திக்கற்ற நிலையை நன்கு எடுத்துக் காட்டும். ஒவ்வோராண்டும் நம் நாட்டிலிருந்து கோடிக் கணக் கான பணத்தை தங்கள் நாட்டிற்குக் கொண்டு செல்வதில் மிகவும் ஊக்கமுடையவர்களாக இருந்தனர் வெள்ளையர் கள். நம் நாட்டு மக்களின் வருமானம் நாளடைவில்