பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卡、4Q + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இருந்து வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் விஷயங்கள் நன்றாகக் கண்காணிக்கப் பெற்று வந்தன. இவர்களறியா மல் இந்நாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான கிளர்ச்சிகளும் தோன்ற முடியா. தவிர, இந்தச் சிற்றரசுகள் ஆங்கில அதிகாரத்திற்கு அஞ்சியவர்களுமாக இருந்தனர். கைத்தடி யும் வாளும் சுருள் கத்தியும் கொண்டு போர் புரியும் நாடுகள் துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு போர்புரிய வல்லவர்களின்கீழ் அடங்கி நடப்பது இயல்பேயன்றோ? ஆங்கிலப் பிரதிநிதிகளின் கருத்தைத் தெளிவாக அறிந்து கொண்டு தங்கள் நாடுகளில் முளைக்கும் சிறு சிறு குழப் பங்களை உடனுக்குடன் அடக்கி வந்தனர். ஒரு சில சமயங்களில் இந்தியப் பகுதிகளினின்றும் தீவிரவாதிகளில் சிலர் இச்சிற்றரசு நாடுகளில் அடைக் கலம் புகும் வாய்ப்புகளும் இருந்து வந்தன. இவர்களை தன்றாகக் காவல் செய்து இவர்களால் யாதொரு அரசியற் குழப்பமும் நேரிடாதபடி சிற்றரசர்கள் விழிப்புடன் கவ னித்துக் கொண்டனர். இங்கனம் அடைக்கலம் புகுவதும் எளிதான செயலாகவும் நடைபெற முடியாத நிலை. கவிமணி: இத்தகைய சூழ்நிலையில் திருவிதாங்கூர் தாட்டில் தோன்றியவர் கவிமணி. இவர் வாழ்ந்து வந்த குமரி மாவட்டப் பகுதி திருவிதாங்கூர் சிற்றரசர்க்குரியதாக இருந்தது. பாரதியாரின் பாடல்கள் இவரை ஆட்கொண்ட போதிலும், வாழ்ந்த சூழ்நிலையின் காரணமாக இவர்தம் பாடல்கள் நாட்டுப் பற்றின் இனிய மணம் கமழ்வதாக அமையவில்லை. ஆனால், நாட்டுப் பற்றுக்குரிய பொருள் களைப் பற்றி இவர் பாடவே இல்லை என்று கருதவும் முடியாது. தம்மை ஆட்கொண்ட கவிதை நாயகனை இவர் பின்பற்றாது இருக்க முடியுமா? இவரும் தேசியம் பற்றித் தேசக் கொடியின் சிறப்பு, காங்கிரசு கப்பல், கதர் விற் பனை வட்ட மேசை மகாநாடு, சுதந்திரம், உழைக்க வேண்டும், குடியரசு வாழ்த்து போன்ற தலைப்புகளில்