பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் 卡 41 + கவிதைகள் புனைந்துள்ளார். இவை மலரும் மாலையும்' என்ற கவிதைத் தொகுப்பின் பிற்காலப் பதிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களெல்லாம் இவர்தம் வாழ்வின் பிற்காலப் பகுதியில் நல்லோர் பலரது வேண்டு கோள்களின் பயனாகப் பாடப் பெற்றவை. இங்கனம் இக்கவிஞர் பெருமானும் தேசிய நீரோட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவராக அமைந்து விடுகின்றனர். பாரதிக்குப் பின்னர் அவர் தாசனாகத் திகழ்ந்த பாவேந்தரிடமும் நாட்டுப் பற்று இல்லாமல் இல்லை. ஆனால், சமூக அநீதிகளைக் கண்டிக்கும் போக்கும் தந்தை பெரியாரின் கருத்துகளும்தான் அவர்தம் பாடலில் தலை தூக்கி நிற்கின்றன. நாட்டு மக்களிடம் ஒற்றுமையின்மை தான் காரணம் என்று கூறும் போக்கில் மூடப்பழக்கங்க ளைச் சாடுகின்றார். இதனை ஓர் ஆங்கிலேயன் வாயில் வைத்துப் பேசுகின்றார். ஒ:என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர் நாவலந் தீவு நம்மை விட்டுப் போகாது; வாழ்கின்றார் முப்பதுமுக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும் ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான் ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே? பேதம் வளர்க்கப் பெரும்பு ராணங்கள்! சாதிசண் டைவளர்க்கத் தக்கஇதி காசங்கள்! கட்டிச் சமூகத்தின் கண்ணவித்து தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார் தேன்சுரக்கப் பேசிஇந்த தேசத்தைத் தின்னுதற்கு வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார் இந்த உழைச்சேற்றை ஏறாத ஆழத்தை எந்தவிதம் நீங்கி நம்மை எதிர்ப்பார்?" 8. சஞ்சீவி பர்வத்தின் சாரல் - ஆங்கிலேயன் பேசுவது