பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் - 43 -- ஏழை அழுதகண்ணி துடைக்கும் கொடி - அவன் இதயம் குளிரஇன்பம் பொழியும் கொடி, ஊழையும் உப்பக்கம் காணும்கொடிநித்தம் உழைத்துமுன் னேறநம்மை ஊக்கும் கொடி (12) * என்ற பாடல்களில் இவற்றைக் கண்டு தெளியலாம். காங்கிரசு கப்பல்: இந்தக் கப்பலின் பகுதிகளை உருவ கப்படுத்திப் பேசுகின்றார் கவிஞர்; இந்தக் கப்பலின் நங்கூரம் பொறுமை; அச்சானி பொதுநலம்; கப்பலின் பாய் வாய்மை. இமயம் முதல் குமரி வரை வாழும் யாவரும் இக்கப்பலில் பயணம் செய்து சாதி, சமயக் கடல்களில் சாய்ந்து சரியாது நீந்திச் செல்லலாம். இக்கப்பலின் வலிமையை, வீரர் திலகர்கள் செய்தகப்பல் - நெஞ்சில் விளைந்த வயிரத்தால் ஆன கப்பல்; பாரத மாதா பாராட்டும் கப்பல் - இன்று பாபு ராஜேந்திரர் ஒட்டும் கப்பல்' என்று காட்டிய பாபு இராஜேந்திரப் பிரசாத் நடத்திச் செல்லும் கப்பல் என்கின்றார். கதர் விற்பனை: முன்னைய காங்கிரசுத் தொண்டர்கள் அன்னிய நாட்டுத் துணியை தவிர்க்குமாறு ஊர்தோறும் பிரசாரம் செய்து கதர் துணி மூட்டைகளைச் சுமந்து சென்று விற்பனை செய்து வந்தனர். ஒரு காலத்தில் தக்ளியும் இராட்டையும் துப்பாக்கி பீரங்கி பலத்தையும் தகர்த்தெறி யும் ஆற்றல் படைத்தனவாக இருந்தன. காந்தியடிகள் நாட்டு மக்களுக்குக் காட்டிக் கொடுத்த அற்புத ஆயுதங்கள் இவை. கதர் உற்பத்தியால் சிற்றுார்களில் உள்ள ஏழைகட்கு வேலை வாய்ப்பு ஏற்படுகின்றது. பாரதியார் பாடல்களில் 10. தேசக் கொடியின் சிறப்பு - 3,4,5,7,8,12 11. காங்கிரசு கப்பல் - 4