பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 44 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஏனோ கதர் பற்றிய பாடல்கள் இல்லை; பாரதிதாசனிலும் இதே திலைதான். கதர் துணி உற்பத்தி செய்து அதனை ஊரூராய்ச் சென்று விற்று வரும் ஒர் ஏழைத் தொழிலாளி பேசுவூதாக இத்தலைப்பின் கீழுள்ள பாடல்கள் அமைகின்றன. பாவிஎன் கதையினைக் கேளும்ஐயா! - அந்தப் பாஞ்சாலி கதையும் தொக்குமோ? ஐயா! ஆவியைப் பிடித்துநான் அலைவதெல்லாம் - என்றன் அருமைக் குழந்தைகளுக் காகவே ஐயா! (1) என்பது முதற் பாடல். இதில் உற்பத்தி செய்து விற்போரின் பரிதாப நிலை காட்டப் பெறுகின்றது. வாடி முகம்சடைத்த மக்களும்உண்டு - தீரா வயிற்றுப் பசியும் உண்டு நானும் உண்டு; விடும் குடியிருக்க இல்லை.ஐயா! - என்றன் விதியின் கொடுமைகளும் கொஞ்சமோ? ஐயா! (3) பருத்தி விளைக்குச்சென்று பஞ்சுவாங்கினேன் - அந்தப் பஞ்சை அரைத்துநல்ல நூலும்நூற்றேன்; ஒருத்தி துணையுமின்றி ஆடையும்நெய்தேன்; அதை ஊரூராய்க் கொண்டுகொண்டு விற்கவும் வந்தேன் (4) அஞ்சு வயதுமகள் கோலம்இட்டால் - அதை அழகில்லை என்றழிக்கும் தாயரும் உண்டோ? பஞ்சு படுவதிலும் பெரும்பாடு - நாங்கள் படுவதும் நீங்கள்அறி யாததோ ஐயா! (9) காசுமியர் சால்வைநெய்த கையும் இல்லையோ - உயர் காசியிலே நெய்தபட்டின் காலமும் போச்சோ? மாசிலாத டாக்காவின் மஸ்லினாடை - இன்னும் வாவென்றால் வாராதோ? வளர்ந்தி டாதோ? (10) 12. கதர் விற்பனை - 1