பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 48 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு அத்தக் காலக் கட்டக் கண்ணாடி கொண்டு நோக்கி னால் இராட்டையும் தக்ளியும் பக்கிங்காம் ஆலைகளையும் தம்பிக்கச் செய்ததையும் வெள்ளையரின் ஆட்சியை நடுங் கச் செய்ததையும் அறியலாம். வட்ட மேசை மாநாடு இந்தப் பாடல்கள்" குறத்தி குறி சொல்லும் பாங்கில் ஆண்டிப் பண்டாரம் மெட்டில் அமைத்து வை. வட்டமேசை மாநாடு மங்களமாய் முடிந்திடுமோ? திட்டமாகச் சுதந்திரத்தின் தீர்மானம் பழுத்திடுமோ? (1) கற்றவர்கள் பெரியோர்கள் கப்பலேறிச் சென்றவர்கள் வெற்றிகொண்டு வருவாரோ? வெறுங்கையராய்த் திரும்புவரோ (2) இத்துக்கள், இஸ்லாமியர், சிற்றரசர்கள் இவர்கள் இசைந்து வரவேண்டிய மாநாடு. அப்போது இங்கிலாந் தில் இரும்பு இதயம் படைத்த சர்ச்சில் முதலமைச்சராக இருந்தார். நம் நாட்டிலிருந்து காந்தியடிகள், மூதறிஞர் மாளவியா, மாதரசி சரோஜினி தேவியார் முதலியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். சர்ச்சிலிடும் கர்ச்சனையில் தளர்ந்துமணம் சடைவாரோ? மெச்சிடவே இந்தியரும் வீரமொழி பகர்வாரோ? (8) 14. ம.மா. தேசியம் - வட்டமேசை மாநாடு