பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு -اس تنه وه என்று நிலவும் நிலைக்கு வருந்துகின்றார். கவிஞரின் தீவிர நாட்டுப் பற்று சுதந்திரத்தை சுதந்திர தேவியாகவே உருவகப்படுத்திப் போற்றி மகிழ்வார் ஒன்பது பாடல்க இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே." என்று சுதந்திரத்தைத் தேவியாகக் கருதி வழிபடுகின்றார். இந்த ஒன்பது பாடல்களும் பக்தியுடன் பாடி மகிழத்தக் ఃఖీణ్ణి. கவிமணி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. சுதந்திரத்தைப் பற்றி இவர் பாடிய இரண்டு பாடல்களும் சுதந்திரம் பெற்ற பின் பாடப் பெற்றவை" அவற்றுள் ஒன்று: மாதவம் செய்து பெற்ற மந்திர வாளைக் கொண்டு வேதனை மிகுந்தி டத்தன் மெய்யினை அரிவ தொக்கும்; கோதிலாச் சுதந்தி ரத்தால் குணம்பெறா தென்றும் நாட்டின் வாதினைப் பெருக்கிச் சண்டை வளர்ப்பவர் செய்கை அம்மா! (2) 17. பா.க. தே.கீ. சுதந்திரத் தேவியின் துதி 18. ம.ம. சுதந்திரம் - 2