பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் + 49 + இன்று நடைபெறுவது கட்சி அரசியல். போட்டா போட்டி யுடன் ஆட்சியைப் பிடிக்க எத்தனையோ தகாத முயற்சி கள் நடைபெற்று வருகின்றன. எல்லாக் கட்சிகளுமே ஏழைகட்குதவுவதாகக் கூறி வாக்குகள் பெறுகின்றன. எங்கும் ஊழல் மலிந்து காணப் பெறுகின்றது. கையூட்டு தாண்டவமாடுகின்றது. தம்தம் பைகளை நிரப்புவதே குறிக்கோளாக இருந்து வருகின்றது. இறந்த பெரியோர்க ளின் பெருமை களைச் சொல்லியே வாக்குகளைப் பெறும் தந்திரம் எல்லாக் கட்சிகளின் மரபாக நிலைத்து விட்டது. இதனை எதிர்பார்த்தே நாட்டுத் தந்தை காந்தியடிகள் சுதந்திரத்திற்குப்பின் காங்கிரசுக் கட்சியைக் கலைத்து விட வேண்டும் என்று தம் யோசனையைத் தெரிவித்தார். தே.வி.யின் பாடலில் இந்த அவலத் தொனி பிரதிபலிக் கின்றது. கவி-5