பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 52 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்ற அப்பர் தேவாரத் திருப்பாடலை நினைவு கூர்ந்து மகிழலாம். சிறு வயது முதற் கொண்டே கவிமணி தெய்வ பக்திமிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பது வயதிலேயே இவ ஆக்கு சிவதீட்சை செய்யப் பெற்றது. திருநெல்வேலியில் வாழ்த்து வந்த உமையொரு பாக தீட்சிதர் இதனைச் செய்து வைத்தார். அச்சமயத்தில் வாழ்த்தாக அவர்மீது ஒரு வெண்பா பாடினார். அது: வேறும் ஒருதுணையான் வேண்டுவனோ வேணுவனம் தேறும் உமையோர்பாகத் தேசிகனே - கூறும்எனக்கு எiாப் பிறவி இருள்அகல நீஅளித்த பொய்யா விளக்கிருக்கும் போது" அழகம்மை ஆசிரிய விருத்தம் இது கவிமணியின் முதல் கவிதை நூல். பத்தொன்பது வயதில் பாடியது. தேரூரில் கோயில் கொண்டிருப்பவர் அன்னை அழகம்மை. இது சுசீந்திரத்துக்கு அருகிலுள்ள தேரூரில் எழுந்தருளியிருக் கும் உதயமார்த்தண்ட விநாயகர்மீது காப்பாக ஒரு வெண்பாவும் தேவியின்மீது பத்து பாசுரங்களும் கொண்ட திருப்பதிகம்.' சீருதவும் நல்லூராந் தேரூர் அழகிதிருப் பேருதவும் பாவினையான் பேசவே - ஒருதய மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல் காத்தாண்டு கொள்ளக் கடன். என்ற வெண்பா அற்புதமாக அமைந்துள்ளது; வளம் மிக்கதாய் விளங்குகின்றது. ஏனைய பத்துப் பாக்களும் பதினான்கு கழி நெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன. பாடலில் ஆசிரி 4. ம.ம. வாழ்த்து உமையொரு பாகக் குருக்கள் 5. மேலது - பக்தி மஞ்சரி - அழகம்மை ஆசிரிய விருத்தம்