பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 53 + யரின் இளமை முறுக்கு, தமிழ் வளம், கருத்துச் செறிவு முதலியவை அற்புதமாக அமைந்துள்ளன. தாயுமானவர் பாடல்கள், சிவகிரி விளங்கவரு தட்சிண மூர்த்தியே! சின்மையா னந்தகுருவே." கருத்தறிய சிற்சபையுள் ஆனந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே!' வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே!" என்று முடிவன போலும், குமரகுருபர அடிகளின் பாடல் கள், தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டி யருளே’ ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலி ஆட வாவே' என்று இறுவனபோலும், இவர்தம் பாடல்களும், தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே! தேவிஅழ கம்மை உமையே!' (இரதபுரி - தேரூர்) என்று முடிகின்றன. இங்ங்னம் இவர்தம் பாடல்கள் யாவும் மேற்குறிப்பிட்ட இரண்டு ஆசிரியர்களின் பாடல் களின் பாணியிலே செல்லுகின்றன. இளம் வயதில் பாடிய 6. தா.பா. சின்மயானந்த குரு 7. கருனாகரக் கடவுள் 8. சித்தர் கணம் 9. மீனா. பிள்ளைத் தமிழ் - சப்பாணி 36 10. மேலது - மேலது - அம்புலி - 63 11. அழகம்மை ஆசிரிய விருத்தம் - 3